எந்தவொரு காரணத்துக்காகவும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் உடையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (04) பிற்பகல் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக ஆசிரியர்களின் உடையை மாற்றி பாடசாலைக்கு வருவதற்கு வசதியான ஆடையை அணிய இடமளிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

எனினும், சில ஆசிரியர்கள் இதற்கு இணங்கவில்லை. அத்துடன், ஆசிரியர்களுக்கு இலகு ஆடைகளை அனுமதிப்பது கலாசார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்றும், இதனை ஒருபோதும் அனுமதிக்கூடாது எனவும் மகாசங்கத்தினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆசிரியர்களுக்கான ஆடை சுதந்திரத்தால் கலாசாரம் சீர்கெடாது என் வலியுறுத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இந்த விடயத்தில் கல்வியமைச்சர் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கல்வி அமைச்சர் இந்த அறிப்பை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *