( வாஸ் கூஞ்ஞ)
எமது பூர்வீக குடியிருப்பு காணிகளை இராணுவத்திடமிருந்து மீட்டு அங்கு நாங்கள் மீள் குடியேற எங்களுக்கு வழி சமைத்து தாருங்கள் என 35 வருடங்களாக அகதிகள் முகாம்களில் வசித்து வரும் யாழ் பொலிகண்டி மக்கள் இவ் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மன்னார் மெசிடோ நிறுவனத்தால் யாழ் பருத்தித்துறை பொலிகண்டி நலன்புரி நிலையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (08.10.2022) காலை 10 மணியளவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ அவர்களpன் தலைமையில் அவர்களின் நிறுவனத்தால் வழங்கி வைக்கப்பட்டது
இலங்கையில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக பலாலிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கடந்த 35 வருடங்களுக்கு மேலாக யாழ் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பொலிகண்டி கிராம சேவையாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சின்னவலைஇ பாலாவிஇ நிலவன்இ ஆகிய அகதிகள் முகாமில் வசிக்கும் வருமானத்தை இழந்து நிற்கும் 75 குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்களே வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வேளையில் இவ் அகதி முகாம்களில் வசிக்கும் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கையில்
யுத்தம் காரணமாக பலாலிப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த நாங்கள் இங்கு தனியார் காணிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளோம் காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை விட்டு விலகுமாறு வற்புறுத்துகின்றார்கள்
எங்களது சொந்தக் காணிகளை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்து பலன் தரும் மரக்கன்றுகளை உருவாக்கி அனுபவித்து வருகின்றார்கள் ஆனால் நாங்கள் அனாதைகளாக ஓலைக் குடிசைகளில் மழை வெள்ளத்திற்குள் சுகாதார சீர்கேடுகளுடன் வாழ்ந்து வருகின்றோம்
எனவே இலங்கை ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு இராணுவத்தினரிடமிருந்து எமது காணிகளை மீட்டு எமது மீள் குடியேற்றத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று இவ் அகதி முகாம்களில் வசிக்கும் மக்கள் தங்கள் கோரிக்கையாக முன்வைத்திருந்தனர்.