(எம்.வை.எம்.சியாம்)
பத்தரமுல்லையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதற்கு பயன்படுத்தப்படும் தொலைப்பேசிகளை திருடிய இருவர் தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 24 மற்றும் 25 வயதுடைய ஹோமாகம மற்றும் பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மஹரகம, பிலியந்தலை, கொட்டாவ மற்றும் ராஜகிரிய உள்ளிட்ட 8 பிரதேசங்களில் இவ்வாறு திருட்டுக்களில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் உள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து 12 கையடக்கத் தொலைபேசிகளை இவர்கள் திருடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.