
எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் உருவாகியுள்ள வரிசை முறைமை 2 நாட்களில் முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள், இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்களால் முற்பதிவுக்கான பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை காரணமாகவே நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விநியோகம் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அடுத்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருட்களினதும் மேலதிக பங்குகளை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படாமையின் காரணமாக மீண்டும் வரிசைகள் உருவாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்