(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) 09.09.2022
கிழக்கு மாகாணத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட வரும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் , சிவில் சமூக பிரதிநிதிகள் , அரசியல் செயற்பாட்டாளர்கள் , மற்றும் மக்கள் போராட்டங்கள் , மனித உரிமை மீறல்களை அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் என பலரை இலக்கு வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை ஐந்து பேருக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலத்திற்கு காலம் இதுபோன்ற விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மீண்டும் குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்துவது எதற்காக என்ற கேள்வி எழுகிறதாகவும்
ஜெனிவா மனித உரிமை மாநாடு நடைபெற்றுவரும் நிலையில்இ எதிர்வரும் 12 ம் திகதி இலங்கை குறித்த விவாதம் நடைபெற உள்ள நிலையில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் தொடர்ந்த வண்ணமே உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் அதி தீவிரமாக செயற்பட்ட போராட்ட காரர்கள் மற்றும் சர்வதேச நாடுகளுக்கு மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை அனுப்பியவர்கள் மற்றும் தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவாளர்களாக செயற்பட்டோர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தவர்கள் என தெரிவு செய்து அவர்களின் செயற்பாடுகளை அடக்கும் முடக்கும் நிறுத்தும் செயற்பாடுகளில் இறங்கி உள்ளனர். அதன் ஒரு கட்டமாகவே பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகள் ஆகும் எனவும்
கிழக்கில் அரசியல் ரீதியாக இலாபம் பெறுவதற்கும்இ அரசுக்கு எதிரான கருத்துகளை நிறுத்துவதற்கும் இது போன்ற விசாரணைகள் பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது என அப் பகுதி மக்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.