ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணையும் ஜீ வி பிரகாஷ்குமார்

இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு திறமையான கலைஞர்கள் முதன்முறையாக இணைந்து  நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு  ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக்  ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதைப் பெற்ற ‘காக்கா முட்டை’ படத்திற்கு இசையமைத்தவர் ஜீ.வி. பிரகாஷ் குமார் என்பதும், இவ்விருவரும் முதன்முறையாக கணவன்=மனைவியாக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்பதும், இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *