
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ஐசிசி) புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆடவர் எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தின் பிரகாரம் 2023 மார்ச் முதல் 2027 மார்ச் வரையான அடுத்த 4 வருடங்களில் இலங்கை மொத்தமாக 142 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
2023 மார்ச் மாதத்திலிருந்து 2027 மார்ச் வரை 28 டெஸ்ட் போட்டிகள், 57 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 57 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை விளையாடவுள்ளது.
ஆனால், ஐசிசி எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தின் பிரகாரம் 2023 இல் இருந்து 2027 வரையிலான நான்கு வருட கிரிக்கெட் பருவகால சுழற்சியில் மொத்தமாக 131 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை விளையாடவுள்ளது.
இதற்கு அமைய 25 டெஸ்ட் போட்டிகள், 52 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 54 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை விளையாடவுள்ளது.
இதில் 2025 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப், 2027 ஐசிசி உலக டெஸ்ட் 2027 உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக ஐசிசி உலக கிண்ண சுப்பர் லீக் ஆகிய போட்டிகள் இதில் அடங்குகின்றன.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையில் முழுமையான அங்கம் வகிக்கும் 12 நாடுகள் குறிப்பிட்ட 4 வருடங்களைக் கொண்ட சுழற்சி பருவகாலத்தில் முன்னரைவிட அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடவுள்ளன.
இக் காலப் பகுதியில் 12 நாடுகளும் மொத்தமாக 777 சர்வதேச போட்டிகளில் விளையாடும். இதில் 173 டெஸ்ட் போட்டிகள், 281 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 323 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் அடங்குகின்றன. நடப்பு 4 வருட சுழற்சி பருவகாலத்தில் விளையாடப்படும் 694 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைவிட அடுத்த பருவ காலத்துக்கான போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.