ஐ.சி.சி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 8ஆவது அத்தியாயத்தில் முதல் சுற்று ஆரம்பமாவதற்கு சில தினங்கள் எஞ்சியுள்ள நிலையில் இலங்கை அதன் இரண்டாவது உத்தியோகபூர்வ பயிற்சிப் போட்டியில் அயர்லாந்தை மெல்பர்ன் ஜன்க்ஷன் மைதானத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை (13) எதிர்த்தாட இருந்த நிலையில் குறித்த போட்டி மழையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஸிம்பாப்வேக்கு எதிராக மெல்பர்ன் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது பயிற்சிப் போட்டியில் 33 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை, உலகக் கிண்ண முதல் சுற்றுக்கு முன்னர் விளையாடவுள்ள கடைசி பயிற்சிப் போட்டி இதுவாகும்.
இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்று உற்சாகத்துடன் உலகக் கிண்ண முதல் சுற்றை இலங்கை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது போட்டி மழையால் ஒரு பந்தும் வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.