(எம்.எம்.சில்வெஸ்டர்)

நியூஸிலாந்து அணியுடான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரான எஞ்சலோ மெத்தியூஸ் ஐ.சி.சி.யின் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையில் 3 இடங்கள் முன்னேறி 17 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் அரைச்சதம் (89) அடித்த குசல் மெண்டிஸ் 2 இடங்கள் முன்னேறி 49 ஆவது இடத்தில் உள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரட்ண 9 ஆவது இடத்திலிருந்து 2 இடங்கள் சரிந்து 11 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டதுடன் தினேஷ் சந்திமால் 3 இடங்கள் சரிந்து 18 ஆவது இடத்தை வகிக்கிறார்.

இதேவேளை, ஐ.சி.சி. யின் டெஸ்ட் பந்துவீச் சாளர்களுக்கான தரவரிசையில் பிரபாத் ஜயசூரிய 4 இடங்கள் முன்னேறி 31 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரைத் தவிர வேறு எந்த இலங்கை பந்துவீச்சாளர்களும் இவருக்கு முன்னரான இடத்தில் இல்லை.

இருந்தபோதிலும், வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ 13 இடங்கள் முன்னேறியும் , லஹிரு குமார 4 இடங்கள் முன்னேறி முறையே 43,47 ஆகிய இடங்களை வகிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *