
ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு சேவையில் நடந்த மோசடி – கண்டுபிடிக்கப்பட்ட போலிகள்
தலங்கம காவல்துறையினருக்கு கிடைத்த 03 முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று (31) சந்தேகநபர்கள் தலங்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
சந்தேகநபரிடம் இருந்து தேசிய அடையாள அட்டை, 15,000 ரூபா மற்றும் 9 போலி கடவுச்சீட்டில் தயாரிக்கப்பட்ட டோக்கன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 47 மற்றும் 65 வயதுடைய மாலம்பே மற்றும் கொழும்பு 9 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் இன்று (01) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.