ஒவ்வொரு__வீட்டிலும்__தேசியக்கொடி- ரஜினி வீடியோ வெளியீடு

தன் வீட்டில் தேசியக் கோடியை ஏற்றியதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு ஒரு பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

 

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில் நாட்டில் உள்ள அனைவரும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில்  தேசியக்கொடி புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இன்று அவருடைய வீட்டிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது

ரஜினிகாந்த் வீட்டின் முன் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தன் வீட்டில் தேசியக் கோடியை ஏற்றியதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில்,  ”இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்ற 75 வது ஆண்டு, நம் நாட்டை வணங்கும் விதமாக, நம் ஒற்றுமையைக் காக்கும் விதமாக  இந்தியா சுதந்திரம் அடையக் எத்தனையோ லட்சம் பேர் எத்தனையோ ஆண்டுகளாக சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக,வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஜாதி,மத, அரசியல் வேறுபாடின்றி, நாம் எல்லாரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையுடன் குறைந்தது 2 அடி, அல்லது 3 அடி அளவுள்ள தேசிய கொடியை வீடுகளில்,வருங்கால தலைமுறைக்குத் தெரியப்படுத்தும் விதமாக கொடியை பறக்கைவிட்டு பெருமப்படுவோம். நாடில்லை என்றால் நாமில்லை. இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *