புதுமுக நடிகர் அமீர் சுகைல் கதையின் நாயகனாக நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘ஓடவிட்டு சுடலாமா’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தயாரிப்பாளரும், நடிகரும், அரசியல்வாதியுமான ஆர். கே. சுரேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் எம். வி. ஜிஜேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ஓடவிட்டு சுடலாமா’. இதில் கேரள மாநில தனுஷ் ரசிகர் மன்றத்தின் மாநில பொருளாளரும், நடிகருமான அமீர் சுகைல் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இவருடன் வினித் மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரகாஷ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் சிவ தாஸ், வி ஏ ரிஜோஷ், அனுஜ் பாபு ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

ரொமான்டிக் கொமடி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எவரிஒன் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வினித் மோகன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் ஆயுதங்களுடன் இருவர் காவல் காக்க.. காதலர்கள் தங்களை மெய்மறந்து காதலிப்பது போன்றும், இவர்களின் பின்னணியில் கார் ஒன்று அந்தரத்தில் பறப்பது போன்றும் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *