
( வாஸ் கூஞ்ஞ) 15.09.2022
மன்னார் மாவட்டத்திற்கு என தனித்துவமான கலை கலாச்சாரம் உண்டு எமது மாவட்டத்தை பற்றி தர குறைவாக பேசுவதற்கு அமைச்சருக்கு எந்த அருகதையும் இல்லை. கஞ்சா பயிர் செய்கைணை ஊக்குவிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான சிந்தனைக் கொண்டவர்தான் அமைச்சர் டயானா கமகே என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுற்றுல்லாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மன்னார் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் இதைக் கண்டித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில்
முதலில் நான் மன்னார் மாவட்டத்தை தரகுறைவாக பேசிய அமைச்சர் டயானா கமகேக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டயானா கமகே மன்னார் மாவட்டத்தை தரகுறைவாக பேசி இருந்தார்.
மன்னார் மாவட்டத்திற்கு என தனித்துவமான கலை கலாச்சாரம் உண்டு எமது மாவட்டத்தை பற்றி தர குறைவாக பேசுவதற்கு அமைச்சருக்கு எந்த அருகதையும் இல்லை.
அமைச்சர் பாராளுமன்ற அமர்வின் போது கஞ்சாவை இந்த நாட்டில் தடை செய்யக்கூடாது என்றும் அதை பயிர் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று முன்பு பேசி இருந்தார் இவர் இப்படியான கீழ்த்தரமான சிந்தனை கொண்டவர்.
இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தகுதியுடையவர்களை அமைச்சுக்கு நியமிக்க வேண்டும் இவரைப் போன்ற தகுதி இல்லாத கீழ்த்தரமானவர்களை அமைச்சுக்கு நியமிக்க கூடாது.
மன்னார் மாவட்ட கலைக் கலாச்சாரங்களை குழி தோண்டி புதைப்பதற்கு இந்த அமைச்சருக்கல்ல எவருக்கும் உரிமை கிடையாது இவரது கருத்துக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.