பிரிட்டனில் ஒரு குழுவினர் கடைகளின் தரையில் பசுப்பாலை கொட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பால் தொழிற்துறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்துப்படுவதாக விலங்கு உரிமைகள் குழுவான எனிமல் ரிபேலியன் (மிருகக் கிளர்ச்சி) அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர், யுவதிகள் கடைகள் மற்றும் சுப்பர் மார்கெட்டுகளுக்குச் சென்று, பால் பக்கற்றுகள், பால் கொள்கலன்களை வாங்கிவிட்டு, அவற்றை அங்கேயே கொட்டுகின்றனர்.
‘பால் தொழில்துறையானது நம்ப முடியாத அளவுக்கு சுற்றாடல் அழிவை ஏற்படுத்துகிறது. எக்ஸோன், ஷெல், பீபி போன்ற எண்ணெய் நிறுவனங்களைவிட உலகின் மிகப் பெரிய 5 இறைச்சி மற்றும் பால் தொழிற்துறை கூட்டுத்தாபனங்கள் அதிக பசுமை இல்ல வாயுகள் வெளிவிடப்படுவதற்கு காரணமாக உள்ளன. தாவரங்கள் அடிப்படையிலான எதிர்காலம் எமக்கு அவசியம்’ என எனிமல் ரிபேலியனட அமைப்பு டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளது.
இறைச்சி மற்றும் தாவர உணவு உட்கொள்வதை தவிர்ப்பதன் மூலம் பசுமை இல்ல வாயு வெளியேற்றங்களை சடுதியாக குறைக்குமாறு உலகை வலியுறுத்தி சர்வதேச தொண்டர் அமைப்பான கிறெய்ன் மற்றும் விவசாய – வர்த்தக கொள்கைகளுக்கான நிறுவகம் ஆகியன வெளியிட்ட அறிக்கையையும் அவ்வமைப்பு பகிர்ந்துள்ளது.
பிரிட்டனின் லண்டன், மன்செஸ்டர், நோர்விக், எடின்பர்க் உட்பட பல நகரங்களில் கடந்த சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.
விலங்கு வேளாண்மையே எமது வனஜீவராசிகள் மற்றும் இயற்கை சுற்றாடல் அமைப்பு அழிவவைத்றகு காரணம் எனவும் அவ்வமைப்பு கூறியுள்ளது.
உலகில் பல நாடுகள், பால் தொழில்துறையில் வெளியிடப்படும் நைதரசன் அளவுக்கான கட்டுப்பாடுகள் உட்பட பல ஒழுங்கு விதிகளை வகுத்துள்ளன. அதேவேளை, பசுப்பாலுக்கு மாற்றாக சோயா, தேங்காய், ஒட்ஸ் போன்றவற்றை பயன்படுத்துமாறு சூழலியலாளர்கள் வலியுறுத்துகின்றனர். எனினும் இத்துறைகள் தொடர்பிலும் விமர்சனங்கள் உள்ளன.
அமெரிக்காவின் சுற்றாடல் பாதுகாப்பு முகவரம் 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் மொத்த பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமானது விவசாயத் துறையின் மூலம் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்துகள் மூலம் 27 சதவீதமும், வலுசக்தி துறையிலிருந்து 25 சதவீதமும் இவ்வாயுகள் வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.