கணக்கை மீண்டும் தொடங்கிய ரஷ்யா: முக்கிய நகரை எதிரி படையிடம் இழந்த உக்ரைன்

கணக்கை மீண்டும் தொடங்கிய ரஷ்யா: முக்கிய நகரை எதிரி படையிடம் இழந்த உக்ரைன்

கிழக்கு உக்ரைனில் உள்ள சோலேடார் நகரை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நகரை கைப்பற்றிய ரஷ்யா

கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் சுரங்க நகரம் என்று அழைக்கப்படும் சோலேடாரை ரஷ்ய படைகள் வியாழக்கிழமை அன்று தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நகரை ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் உக்ரைனிய துருப்புகளை அருகே உள்ள மிகப்பெரிய நகரான பாக்முட்டிலில்(Bakhmut) இருந்து துண்டிக்க அனுமதிக்கும் என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

கணக்கை மீண்டும் தொடங்கிய ரஷ்யா: முக்கிய நகரை எதிரி படையிடம் இழந்த உக்ரைன் | Russia Says It Has Taken Soledar UkraineSky News

 

உக்ரைன் மீதான படையெடுப்பில் தொடர்ச்சியான போர்க்கள பின்னடைவுகளுக்குப் பிறகு, சோலேடார் நகரத்தின் வீழ்ச்சி ரஷ்யாவுக்கு அரிய வெற்றி வழங்கியுள்ளது.

ஆனால் ரஷ்யாவின் இந்த கூற்றுகள் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை.

உக்ரைன் மறுப்பு

உக்ரேனிய அதிகாரிகள் மாஸ்கோவின் கூற்றை மறுத்துள்ளதுடன், அங்கு சண்டை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் அமைந்துள்ள Soledar, செப்டம்பர் மாதம் மாஸ்கோ-வால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட நான்கு உக்ரேனிய பிராந்தியங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *