
கண்டியிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரயில் பேராதனை மற்றும் பிலிமத்தலாவ நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கண்டி ரயில் நிலைய ஊழியர்களினால் பழுதடைந்த பாதை திருத்தம் செய்யப்பட்டு வருவதாகவும், இன்று மாலையில் குறித்த மார்க்கத்தின் ஊடான சேவைகளை வழமைக்கு திரும்பச் செய்ய முடியும் என்றும் ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.