கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்றைய தினம் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்ததோடு 50 பேர் வரை தப்பிச்சென்றிருந்தனர்.
தப்பிச்சென்றவர்களில் 35 பேர் வரை மீண்டும் சரணடைந்திருந்தனர்.
இந்தநிலையில் பாதுகாப்பு துறையினர் புனர்வாழ்வு மையத்திற்குள் பிரவேசிப்பதனை தடுத்து கைதிகள் இன்றைய தினம் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
எனினும் தற்போது பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கந்தக்காடு புனர்வாழ்வு மையம் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.