கனடா தொடர் ஆயுததாக்குதல் கைதியின் பின் சந்தேகநபர் மரணம்!

கனடாவில் இடம்பெற்ற ஆயுத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

சந்தேகநபரான மைல்ஸ் சென்டர்ஸன் சஸ்காட்செவன், ரோஸ்தெர்ன் நகரில் மகிழுந்து ஒன்றிலிருந்த சந்தர்ப்பத்தில் காவல்துறையினால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது, அவர் காயமடைந்திருந்ததாகவும், அவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என அந்த நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.

அவரது மகிழுந்தில் இருந்து ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 18பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.