அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாகவும்,  படகில் ஏறுவதற்கு முன் ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.

எனினும், விபத்துக்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து 1800 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வுங் தாவோ துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *