
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்று கம்போடியாவை சென்றடைந்தார்.
கம்போடியரில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) உச்சிமாநாட்டில் பங்குபற்றும் தலைவர்களை சந்திப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் அங்கு சென்றுள்ளார்.
கம்போடிய ஜனாதிபதி ஹுன் சென்னை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்து கலந்துரையாடினார்
நாளை மறுதினம் இந்தோனேஷியாவில் ஆரம்பமாகவுள்ள ஜி20 உச்சிமாநாட்டிலும் ஜோ பைடன் பங்குபற்றவுள்ளார்.
இதன்போது சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கும் ஜோ பைடனும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளனர்.