
சீனா கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு முன்னதாக( ஞாயிற்றுக்கிழமைஆரம்பமாகியுள்ளது) சீனாவில் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமடைந்து காணப்பட்டன இவை சீன ஜனாதிபதியின் சாதனைகளை மிகைப்படுத்துவதுடன் அவரை மக்களிற்கு நெருக்கமானவராக சித்தரிக்க முயன்றன
ஜனவரி ஆறாம் திகதி சீனாவின் தேசிய பிரச்சார அமைச்சர்கள் மாநாடு இடம்பெற்றவேளை பாரிய பிரச்சார நடவடிக்கைகள் குறித்த திட்டம் முன்வைக்கப்பட்டது.
சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாடு இந்த மாதம் 20 திகதி இடம்பெறவுள்ளதுஇதற்கு முன்னதாக மத்திய குழு உறுப்பினர்கள் இந்த பிரச்சார நடவடிக்கையின் மையமாக ஜீயின் சிந்தனைகளை முன்னிறுத்தவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எனினும் அனைத்தும் உடனடியாக இடம்பெறவில்லை முன்னெடுக்கப்படுகின்ற பாரிய பிரச்சார நடவடிக்கைகள் குறிப்பிட்ட காலத்தில் வெளிவரும்.
சமூக ஊடகங்களும் ஒருவர் கற்பனை செய்து பார்க்ககூடிய அனைத்து விதத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.
சீன ஜனாதிபதியை எதிர்மறையாக சித்தரிக்கும் முயற்சிகள் நடவடிக்கைகள் ஒடுக்கப்படுகின்றன.
சீனாவை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜனநாயக நாடாக சித்தரிக்கும் முயற்சிகளிற்கே அனுமதி வழங்கப்படுகின்றது.
சீனாவின் சமூக ஊடகமான வெய்போ சாதாரண மக்களின் ஆதரவை வெளிப்படுத்துவதற்காக 20வது மாநாட்டிற்கு வரவேற்கப்படுகின்றீர்கள் என்பதை டிரென்ட் செய்கின்றது.
சீனாவின் ஜனநாயக பண்பை வெளிப்படுத்துவதற்கான பல விளம்பர நோக்கம் கொண்ட கல்வி மற்றும் செய்தியாளர்கள் சந்திப்புகள் இடம்பெறுகின்றன.
சீனா ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னர் உரிய தருணத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.
எனினும் சீன ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
சீனாவின் பூஜ்ஜிய கொவிட் கொள்கை கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது ஆர்ப்பாட்டங்கள் மூலம் இது வெளிப்படுகின்றது.வீட்டு அடமான கட்டிடங்கள் தொடர்பான நெருக்கடியும்; பிரச்சினைகளை தீவிரப்படுத்துகின்றது.
சீனா அரசாங்கம் எதிர்ப்புக்குரலை அடக்குவதற்காக எந்த முயற்சியையும் எடுப்பதற்கு தயாராகவுள்ளதை வெளிப்படுத்துகின்றது.
நாட்டின் சைபர்வெளி நிர்வாகம் 1.34 சமூக ஊடக கணக்குகளை முடக்கியுள்ளது.22 மில்லியன் பதிவுகளை அழித்துள்ளது.
விதிமுறைகளை மீறிய 20 மில்லியன் பதிவுகளை நீக்கியுள்ளதாக வெய்போ அறிவித்துள்ளது.
இந்த பதிவுகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிரானது என திபெத் பிரெஸ் தெரிவித்துள்ளது.