இந்தியாவின் சென்னையில் டெக்கத்தலோன் உள்ளக விளையாட்டரங்கில் கராத்தே சுற்றுப்போட்டி Open Invitational Karate Championship 2022 நடைபெற்றது.
இந்த சுற்றுப்போட்டி அண்மையில் MBSK பிரதம பயிற்றுநரும், சோட்டோக்கான் கராத்தே அகடமி இன்டர்நெஷனல் கலையகத்தின் இந்திய பிரதிநிதியுமான சென்செய். G. யோகேஸ்வரன் அவர்களின் ஒருங்கமைப்பில் நடைபெற்றது.
இப்போட்டி நிகழ்வில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே தோ அமைப்பின் பிரதம ஆலோசகரும், சென்னை மாநகரத்தின் முன்னாள் முதல்வருமான சிஹான் கராத்தே ஆர்.தியாகராஜன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
பிரதம அதிதி மற்றும் விருந்தினர்களுக்கு சுற்றுப்போட்டியின் மேற்பார்வையாளராக கடமையாற்றிய சிஹான் அன்ரோ டினேஷ் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்தார்.
சிஹான் அன்ரோ டினேஷ், ஜப்பான் கராத்தே தோ சம்மேளனம் (JKF) மற்றும் அகில ஜப்பான் கராத்தே சோட்டோகான் அமைப்பின் (AJKS) உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது