புத்தளம் கற்பிட்டி கண்டகுழி பகுதியில் இன்று (11)  அதிகாலை திடீரென சுமார் 12 திமிங்கலங்கள் உயிருடன்  கரையொதிங்கியுள்ளன. இந்நிலையில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கரையொதிங்கிய திமிங்கலங்களை கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கற்பிட்டி விஜய கடற்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடும் பிரியத்தனத்திற்கு மத்தியில் கடலுக்குள் மீண்டும் அனுப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன்போது திமிங்கலங்களை கயிறுனால் கட்டி இயந்திரப்படகு மூலம் இழுத்துக் கொண்டுச் சென்று கடலின் ஆழமான பகுதியில் விடுவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த 3 திமிங்கலங்களங்களையும் பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட  உள்ளதாக கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த திமிங்கலம் (Filet  Whale) பைலட் வேல் என அழைக்கப்படும் திமிங்கலம் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்மையில் கற்பிட்டி தழுவ பகுதியில் உயிருடன் கரையொதிங்கிய புள்ளிச் சுறாவை கடற்படையினர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடலுக்குள் மீண்டும் அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *