(வாஸ் கூஞ்ஞ) 04.10.2022
மன்னார் கல்மடு படிவம் இரண்டு பகுதிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் ஒரு குழுவினர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய உப உணவு செய்கையை பார்வையிட சென்றிருந்தது
செவ்வாய் கிழமை (04.10.2022) அங்கு சென்றிருந்த குழுவில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் (விரி) எஸ். உதயச்சந்திரன் , மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் க.மகேந்திரன் , மன்னார் மாவட்ட செயலக பிரதான கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன் விவசாய திணைக்கள பூந்கனிவியல் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி இருதயநாதன் அர்ஜின் குரூஸ் ஆகியோரும் இவ் குழுவில் இணைந்து இருந்தனர்.
இவ் பகுதியில் பலதரப்பட்ட உப உணவுப் பயிர் செய்கையை மிகவும் திறம்பட செய்கை பண்ணியிருந்ததையிட்டு இதில் ஈடுபட்ட விவசாயிகளை இவ் குழுவினர் பாராட்டியதுடன் அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.