(வாஸ் கூஞ்ஞ)
கடந்த சில தினங்களாக மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள கனத்த மழை காரணமாக அப் பகுதியிலுள்ள காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் நிமித்தம் இவ் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதின் காரணமாக இவ் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ் நீர் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்துள்ளமையால்
இவ் பகுதியில் தாழ் நிலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருக்கும்போது மீண்டும் வான் கதவுகள் மூடும் வரைக்கும் மிகவும் அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு நீர் மின் நிலையப் பொறுப்பதிகாரி இவ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.