( வாஸ் கூஞ்ஞ) 26.08.2022
வட மாகாணத்தில் பல கோணங்களில் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பது உங்களால் தெரிவிக்கப்படடிருக்கின்றபோதும் தனியார் காணிகளாக இருந்து இவற்றிற்கான ஆவணங்கள் உங்களிடம் இருக்குமாகில் நாம் வழக்கு தாக்கல் செய்து நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என மன்னாரில் சிறந்து விளங்கும் சட்டத்தரனி திருமதி எஸ்.புராதினி இவ்வாறு தெரிவித்தார்.
‘மெசிடோ’ நிறுவனத்தினால் அதாவது சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமானது ‘வட மாகாண காணி அபகரிக்கப்பட்ட குரல்’ என்ற தொணிப் பொருளில் மன்னாரில் இவ் நிறுவனத்தின் தலைவர் யட்சன் பிகிராடோ தலைமையில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் காணி பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள தலா பத்து பேர் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கான கருத்தமர்வு செவ்வாய் கிழமை (23.08.2022) இடம்பெற்றது.
இவ் கருத்தமர்வில் வளவாளராக கலந்து கொண்ட மன்னாரில் சிறந்து விளங்கும் சட்டத்தரனி திருமதி எஸ்.புராதினி தெரிவிக்கையில்
இலங்கையின் வட மாகாணத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து உங்கள் காணி பிரச்சனை தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு வந்திருக்கும் நீங்கள் அந்த அடிப்படையில் உண்மையில் யாவரும் பாதிப்படைந்தவர்கள் என்ற அடிப்படையில் நீங்கள் இங்கு தெரிவித்த கருத்துக்கள் அமைந்துள்ளன.
உங்கள் பிரச்சனைகளை நாங்கள் எவ்வாறு தீர்ப்பது என்று நோக்கும்போது அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்ட காணிகள் அதாவது பாதுகாப்பு படைகளால் அபகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வன விலங்கு பாதுகாப்பு பகுதினராலும் தொல்பொருள் பாதுகாப்பு பிரிவினராலும் இவ்வாறு உங்கள் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது என்பது உங்கள் கருத்துக்களிலிருந்து வெளி கொணரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக காணிகள் அபகரிக்கப்பட்டிருந்தாலும் ஆவணங்களை வைத்திருக்கும் உங்கள் தனியார் காணிகளை எவ்வாறு நாம் தீர்க்க வேண்டும் என்பது நாம் முடிவு எடுப்பதில் கட்டாயத்தின் நிமித்தம் இருக்கின்றோம்.
உங்கள் ‘மெசிடோ’ நிறுவனத்தினூடாக நாங்கள் முடிந்த அளவு இது தொடர்பாக நாம் நடவடிக்கையை முன்னெடுப்போம்.
இது எவ்வாறு அமையுமென்றால் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வருகை தந்திருப்பவர்களிலிருந்து தலா ஒரு பிரதிநிதியை தெரிந்தெடுத்து இவர்கள் மூலமாக உங்கள் மாவட்டங்களில் எவ்வாறானா பிரச்சனைகள் காணப்படுகின்றன என்பதை ஒரு சமரியாக எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அதன் பிற்பாடு இதன் பிரச்சனைகளை எந்த வழியில் தீர்க்க முடியும் என நாங்கள் ஆய்வு செய்து அதன் பின் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அத்துடன் தனியார் காணிகளாக இருந்து இவற்றிற்கான ஆவணங்கள் உங்களிடம் இருக்குமாகில் நாம் வழக்கு தாக்கல் செய்து நீதியை பெற்றுக்கொள்ள முடியும்.
இராணுவம் அபகரித்து வைத்திருக்கும் காணிகளை மீட்பது மிகவும் இலகுவான விடயம் அல்ல. இருந்தும் இது தொடர்பாக நாம் முயற்சிகளை மேற்கொள்ள முடியும் எனவும் இவ்வாறு தெரிவித்தார்.