(நெவில் அன்தனி)

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் (MCA) 112 வருட வரலாற்றில் முதல் தடவையாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பங்குபற்றும் அணிக்கு அறுவர் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (11) நடைபெறவுள்ளது.

மேலும் வர்த்தக கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கிரிக்கெட் சுற்றப் போட்டி ஒன்று கொழும்புக்கு வெளியில் பிற மாவட்டம் ஒன்றில் நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

 

இந்த சுற்றுப் போட்டி MCA Banks-Finance 6 – a – side cricket  என பெயரிடப்பட்டுள்ளது.

MCA   அணிக்கு அறுவர் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான அனுசரணையை ஏற்றுள்ள நிப்பொன் பெய்ன்ட்ஸ் நிறுவனம் சார்பாக விற்பனை முகாமையாளர் பிரமித்த விஜேசேன அனுசரணைக்கான காசோலையையை வர்த்தக கிரிக்கெட் சங்கத் (MCA) தலைவர் நலின் விக்ரமசிங்கவிடம் கையளிப்பதையும் போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் லக்மால் டி சில்வா, MCA சிரேஷ்ட உதவித் தலைவர் மஹேஷ் டி அல்விஸ், MCA பொதுச் செயலாளர் தரிந்த்ர களுப்பெரும ஆகியோரையும் படத்தில் காணலாம். (படப்பிடிப்பு: ஜே. சுஜீவகுமார்)

MCA அணிக்கு அறுவர் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான NDBயின் அனுசரணையை வங்கி சார்பில் MCA போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவிரிடமிருந்து வர்த்தக கிரிக்கெட் சங்கத் தலைவர் நலின் விக்ரமசிங்க பெற்றுக்கொண்டார்.

 

பங்குபற்றும் 9 அணிகளின் பிரதிநிதிகள்

 

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தில் முதல் தடவையாக கிரிக்கெட் அக்கடமியை ஆரம்பித்தமை வலைப்பயிற்சிக்கான மின்விளக்குகளை MCA மைதானத்தனத்தில் பொருத்தியமை ஆகிய பணிகளில் பிரதான பங்காற்றிய சமகால வர்த்தக கிரிக்கெட் சங்கத் தலைவர் நலின் விக்ரமிசிங்கவின் முயற்சியாலேயே வர்த்தக சங்க கிரிக்கெட் போட்டி ஒன்று முதல் தடவையாக பிற மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் பயிற்சியங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு வர்த்தக கிரிக்கெட் சங்க கிரிக்கெட் பயிற்சியகத்திலிருந்து 15 வயதுக்குட்பட்ட, 19 வயதுக்குட்பட்ட அணிகளை பங்குபற்றச் செய்யவுள்ளதாகக் குறிப்பிட்ட நலின் விக்ரமசிங்க, விரைவில் ஆசியாவில் உள்ள கிரிக்கெட் பயிற்சியகங்களுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றப் போட்டி இலங்கையில் நடத்தப்படும் எனவும் கூறினார்.

இது இவ்வாறிருக்க, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையிலான அங்குரார்ப்பண அணிக்கு அறுவர் கிரிக்கெட் போட்டியில் 9 அணிகள் பங்குபற்றுகின்றன.

சிட்டிசென்ஸ் டெவலப்மென்ட் பாங்க், LB பினான்ஸ், ஹட்டன் நெஷனல் வங்கி ஆகியன ஏ குழுவிலும் ஓரியன்ட் பினான்ஸ், யூனியன் வங்கி, அசெட்லைன் லீசிங் ஆகியன பி குழுவிலும் பீப்ள்ஸ் லீசிங், கொமர்ஷல் வங்கி, ஓரியன்ட் பினான்ஸ் ஆகியன சி குழுவிலும் போட்டியிடவுள்ளன.

இப் போட்டி ஹொங்கொங் சிக்சஸ் போட்டி விதிகளைப் பின்பற்றி நடத்தப்படும்.

இந்த 3 பிரிவுகளுக்குமான போட்டிகள் லீக் அடிப்படையில் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு அணியும் தலா 2 போட்டிகளில் விளையாடும். லீக் சுற்று முடிவில் 3 குழுக்களிலும் முதலிடங்களைப் பெறும் அணிகளும்  அதிசிறந்த 2ஆம் இடத்தைப் பெறும் அணியும் நொக் – அவுட் சுற்றில் விளையாட தகுதிபெறும்.

இந்த சுற்றுப் போட்டியில் அதிசிறந்த துடுபாட்ட வீரர், அதிசிறந்த பந்துவீச்சாளர், அதிக சிக்ஸ்கள் அடிக்கும் வீரர், இறுதிஆட்ட நாயகன் ஆகிய விருதுகள் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *