
அயர்லாந்துக்கு எதிரான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றில் வெற்றியீட்டியதன் மூலம் பெரும் உற்சாகம் அடைந்துள்ள இலங்கை, இரண்டாவது வெற்றிக்கு குறிவைத்து அவுஸ்திரேலியாவை இன்று எதிர்த்தாடவுள்ளது.
உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி பேர்த், ஒப்டஸ் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதே குழு இதே குழுவில் ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்திடம் படுதோல்வி அடைந்ததால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதற்கும் மிக மோசமான எதிர்மறை நிகர ஓட்ட வேகத்தை (-4.45) சீர் செய்வதற்கும் அவுஸ்திரேலியா முயற்சிக்கவுள்ளது.
உலக சம்பயின் அவுஸ்திரேலியாவை வெற்றிகொள்வதற்கு இன்றைய முக்கிய போட்டியில் ஆசிய சம்பியன் இலங்கை விவேகத்துடன் விளையாடுவது அவசியமாகும்.
இப் போட்டிக்க நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா, இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணியில் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க மீண்டும் விளையாடுவதுடன் அயர்லாந்துடனான போட்டியில் அவருக்குப் பதிலாக விளையாடிய அஷேன் பண்டார நீக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியில் அடம் ஸம்ப்பா நீக்கப்பட்டு ஏஷ்டன் அகார் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அணிகள்
பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ.
அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (தலைவர்), மிச்செல் மார்ஷ், க்லென் மெக்ஸ்வெல், மார்க்ஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், மெத்யூ வேட், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஏஷ்டன் அகார், ஜொஷ் ஹேஸ்ல்வூட்.