இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான 1.18 இலட்சம் கோடி ரூபா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதன்படி, கிராமபுறங்களில் வீட்டு வசதி மற்றும் 18.36 இலட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்கான உத்வேகத்துடன் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான பட்ஜெட்டை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி தாக்கல் செய்தார்.
ஐந்து ஆண்டுகளுக்குள் யூனியன் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க பட்ஜெட் உறுதியளிக்கிறது.
நல்லாட்சியின் கருப்பொருள்களைக் கொண்டுள்ளதுடன் அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நிலையான விவசாயத்தை ஊக்குவித்தல், முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை எளிதாக்குதல், வேலைவாய்ப்பு உருவாக்கம், துரித வளர்ச்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்கள் அதிகாரம், சமூக உள்ளடக்கம் போன்றவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு இறுதிக்குள் காஷ்மீர் ரயில் திட்டம் மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படும் என்றும், அடுத்த நிதியாண்டில் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் இலகுரக மெட்ரோ ரயிலை வெளியிடவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.
லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில் திருமதி. சீதாராமன் கூறுகையில்,
நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட் மதிப்பீடுகள் ரூ.1,18,500 கோடியாகும். இதில் அபிவிருத்திக்கான செலவு ரூ.41,491 கோடி ஆகும்.
எதிர்பார்க்கப்படும் வருவாய் வரவுகள் ரூ.1,06,061 கோடி என்றும், அதேவேளை வருவாய் செலவு ரூ.77,009 கோடி என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மூலதனச் செலவுக்கான வருவாய் உபரி ரூ.29,052 கோடி கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.