
வாஸ் கூஞ்ஞ)
குருந்தூர் மலையின் கீழ் வாழும் தமிழ் மக்களின் விவசாயக் காணிகளை அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என தண்ணீர் முறிப்பு மக்களுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அமைச்சரை சந்தித்தபோது உறுதிமொழி தெரிவித்தபோதும் அமைச்சருக்கு தெரியாது இவ் விவசாயக் காணிகள் அபகரிக்கும் நடவடிக்கையைச் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மீண்டும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இது தொடர்பாக தெரிய வருவதாவது குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் அப் பகுதி தமிழ் மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்களை தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரிக்க முற்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் இது தொடர்பான அமைச்சர் விதுரவிக்கிரமவின் கவனத்துக்கு ஏற்கனவே கொண்டு சென்றிருந்தார்.
அவ்வாறு நடைபெறாதிருக்க தான் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அப்பொழுது உறுதிமொழி வழங்கியிருந்ததாகவும்
ஆனால் கடந்த வாரம் தொல்பொருள் திணைக்களம் இதை மீண்டும் சுவீகரிக்கும் நோக்குடன் செயல்பட்டபோது இத தொடர்பாக இவ் வாழ் மக்கள் மீண்டும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
இதையிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெள்ளிக்கிழமை (16.09.2022) இப் பகுதிக்குச் சென்று நிலமையை கவனத்தில் எடுத்துக்கொண்டதுடன்
உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் தொடர்பு கொண்டு புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவீகரிப்பதற்கான செயல்பாட்டில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தும் மக்களை வாழ்வாதாரங்களை பாதிக்கும் என்றும் அமைச்சருக்கு தெளிவு படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விவசாயிகள் பாதிக்கபடாத வகையில் உடனடியாக தான் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தன்னிடம் உறுதிமொழி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.