
(வாஸ் கூஞ்ஞ)
இலங்கை மலைநாட்டுப் பகுதியான நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த சிலர் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.
இவர்கள் தோட்ட வைத்திய சாலைக்கு கொண்டு சென்று பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பட்டவர்களில் 7 பெண்கள் 6 ஆண்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் சிலர் இவ் குளவி கொட்டுக்கு இலக்காகிய வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இவ் சம்பவம் செவ்வாய் கிழமை (06.09.2022) இடம்பெற்றுள்ளது.