குளவி தாக்கியதில் ஆசிரியர்கள் – மாணவர்கள் அடங்கலாக 30க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில்!

வவுனியா – போகஸ்வெவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கலாக 30க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள பாடசாலையின் வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு இன்று காலை கலைந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்தநிலையில், குளவி கொட்டுக்கு இலக்கான 22 பேர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிலர் பதவிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *