( வாஸ் கூஞ்ஞ) 19.10.2022
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து ஆறு நபர்கள் சந்தேகத்தின் நிமித்தம் கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து ஒரு கிலோ 532 கிராம் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் பொலிசார் திங்கள் கிழமை (17.10.2022) புத்தளம் நுரைச்சோலை பகுதிக்குச் சென்று குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது ஒரு கிலோ 26 கிராம் கொகெய்ன் போதைப் பொருளை வைத்திருந்த ஒரு கோஷ்டினரை சந்தேகத்தின் நிமித்தம் கைது செய்துள்ளனர்.
இவர்கள் 25 , 26 , 34 , 36 . 53 வயது கொண்டவர்கள் எனவும் இவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரனையில் மன்னார் நானாட்டான் அறுகுகுண்டு பகுதில் ஒருவரின் வீட்டிலிருந்தும் 506 கிராம் கொக்கேன் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக 48 வயதுடைய நபரும் சந்தேகத்தின் நிமித்தம் கைது செய்யப்பட்டு இந்த ஆறு நபர்களும் மன்னார் பொலிசில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்ட வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையில் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் சந்தணஅழக்கோன் , வடமாகாண பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரியவின் மேற்பார்வையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்சான் நாகாவத்தவின் பணிப்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத்விதானகே , மன்னார் மாவட்ட குற்றதடுப்புபிரிவு பிரிவு பொறுப்பதிகாரி பொ.ப.ரத்னாயக தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கொக்கேன் போதை பொருளினையும் அதனை உடைமையில் வைத்திருந்த சந்தேகநபர்களையும் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.