வெளிநாடுகளிலிருந்து பெண்களை சுற்றுலா விசாவில் இலங்கைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரால் நடத்தப்பட்டதாக கூறப்படும் சொகுசு விபசார நிலையம் ஒன்றை பாணந்துறையில் ஊழல் தடுப்பு அதிரடிப்படையினர்  சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது இந்தோனேஷிய பெண் உட்பட இரண்டு பெண்களும் அதன் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்திலிருந்து குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள், பத்தாயிரம் ரூபா பணம் மற்றும் வங்கி பற்றுச்சீட்டுகள் ஆகியவை அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கொள்ளுப்பிட்டி மல் வீதியிலுள்ள ஆடம்பரமான இரண்டு மாடி வீடு ஒன்றில் வெளிநாட்டுப் பெண்களை பணத்துக்காக விற்பனை செய்யும் இரகசிய வியாபாரம் இடம்பெறுவதாக பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *