கோதுமை மா தட்டுப்பாடு 15 உடன் நிறைவுக்கு வருமென நம்பிக்கை

தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாடுஎதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னர்முடிவுக்கு வரும் என நம்பிக்கை கொள்வதாகஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துருக்கியிலிருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்னஎமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும்கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 450 ரூபா வரையில் அதிகரித்தால், 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை, 350 ரூபா வரையில் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்குஅரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால்தாங்களும்நுகர்வோரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில்நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அநுராதபுர மாவட்ட சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க அனுரகுமாரபாண் இறாத்தல் ஒன்றின் விலை தற்போது 240 ரூபாவிலிருந்து, 270 ரூபாவாக அதிகரித்துளளதென குறிப்பிட்டுள்ளார்.

நாளைய தினம்கோதுமை மா கிலோகிராம ஒன்றின் விலை 420 ரூபா வரையில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.அவ்வாறெனின்பாண் இறாத்தல் ஒன்றின் விலை 320 ரூபாவாக அதிகரிக்கும்.

நாளை மறுதினம் கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 450 ரூபாவாக அதிகரித்தால்பாண் இறாத்தல் ஒன்றின் விலை 350 ரூபா வரையில் அதிகரிக்கும் நிலை உள்ளதாக அநுராதபுர மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க அனுரகுமார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *