
ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை இன்று முதல் அதிகரிக்கின்றதாக வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சி 50 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் விலை அதிகரிப்பின் படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாவாக விற்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் தற்போதைய விலை 1500 ரூபா முதல் 2000 ரூபா வரை சந்தையில் விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.