
கோயம்புத்தூரில் காரில் எரிவாயுசிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்த விசாரணைகளை இந்தியாவின் தேசிய விசாரணை பணியகம் பொறுப்பேற்றுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவிலின் முன்னாள் காருக்கும் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தது அதனை தொடர்ந்து அவரது வீட்டில் வெடிமருந்துகள் மீட்கப்பட்டமை பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.தேசிய புலனாய்வு முகமையின் டிஐஜி மற்றும் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொள்ள கோவை சென்றுள்ளனர். இன்று பிற்பகலில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.காரில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், ஜமேசா முபினின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து காவல்துறையினரிடம், என்ஐஏ அதிகாரிகள் கேட்டறிந்து விசாரணை நடத்த உள்ளனர். என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினாலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கோவை காவல்துறை வசம்தான் உள்ளது என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்