
( வாஸ் கூஞ்ஞ)
தமிழ் மக்களின் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும் நட்பு நாடான இந்தியாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்தும் முகமாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள; தமது சாத்வீகமாகன ஜனநாயகமான நூறுநாட்கள் செயல்முனைவை ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பpத்து வெள்ளிக்கிழமை (02.09.2022) 33 வது நாளை எட்டியுள்ளது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் எட்டு மாவட்டங்களிலும் நடைபெறும் நூறு நாட்கள் இவ் செயல் முனைவானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரனையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இனையம் (போரம்) மற்றும் ‘மெசிடோ’ நிறுவனங்களின் ஏற்பாட்டில் இவ் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இவ் செயல் முனைவின் 33 வது நாள் மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளிக்கிழமை (02.09.2022) காலை 10 மணியளவில் புதிய பஸ் நிலையத்தில் முசலி பிரதேச பகுதியிலிருந்து நாலா பக்கங்களிலிருந்தும் வந்த மக்கள் ஒன்றுகூடியபோது அவர்களுக்கு இந்த 100 நாட்கள் செயல் முனைவு பற்றிய விளக்கவுரை அளிக்கப்பட்டது.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரலாக இவ் செயல் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
-இதற்கான விளக்கவிரையை மன்னாரில் சிறந்த சட்டத்தரனியாக விளங்கும் சட்டத்தரனி செல்வராஜ் டினேஷ் மற்றும் மெசிடோ நிறுவன மன்னார் பணிப்பாளர் யட்சன் பிகிராடோ ஆகியோர் நிகழ்த்தியதுடன் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரலாக மக்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.