
( வாஸ் கூஞ்ஞ)
தமிழ் மக்களின் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும் நட்பு நாடான இந்தியாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்தும் முகமாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள; தமது சாத்வீகமாகன ஜனநாயகமான நூறுநாட்கள் செயல்முனைவின் விழப்புணர்வு போராட்டம் ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பpத்து வெள்ளிக்கிழமை (12.10.2022) 73 வது நாளை எட்டியுள்ளது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் எட்டு மாவட்டங்களிலும் நடைபெறும் நூறு நாட்கள் இவ் செயல் முனைவானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரனையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இனையம் (போரம்) மற்றும் ‘மெசிடோ’ நிறுவனங்களின் ஏற்பாட்டில் இவ் திட்டம் மன்னாரிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இவ் செயல் முனைவின் 73 வது நாள் மன்னார் நகரில் பிரதேச பகுதியிலிருந்து நாலா பக்கங்களிலிருந்தும் வந்த மக்கள் தங்கள் உரிமைகளுக்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் போராட்டத்தின்போது ‘ஒன்று கூடுவது எமது உரிமை’ . ‘கருத்துச் சுதந்திரம் எமது உரிமை’ , ‘கௌரவ உரிமையுடன் அரசியல் தீர்வு வேண்டும்’ போன்ற வாசகங்களுடன் பதாதைகளை ஆண்கள் பெண்கள் இரு பாலாரும் தாங்கியவர்களாக இவ் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரலாக இவ் செயல் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.