ஆக்கிரமிக்கப்பட்ட க்ரைமியா தீபகற்பத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உள்ள ஒரே ஒரு கடவையில் பயணித்த பாரவூர்தி ஒன்று மோதியதன் காரணமாக எரிபொருள் தாங்கி தொடருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகம் அறிவித்துள்ளது.
தொடருந்தின் இரண்டுக்கும் மேற்பட்ட தாங்கிகள் வெடித்தமை காரணமாக பாரியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
ஒரு தொடருந்து தீப்பிடித்து எரிவதைக் காட்சிகள் சித்தரிக்கின்றன. அருகில் உள்ள சாலையைக் கடக்கும் பகுதியும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தின் போது உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதற்கான தகவல்கள் எதுவும் வௌியிடப்படவில்லை.
க்ரைமியா கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது விபத்து இடம்பெற்ற கேச் பாலத்தின் ஊடாக உக்ரேனுக்கு ராணுவ தளவாடங்கள் எடுத்துச்செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலை அடுத்து குறித்த பகுதிக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.