
ஈரானின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மஹ்சா அமினி என்ற 22 வயதுடைய யுவதி மரணமடைந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானின் – சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஹ்ஷா அமினி கடந்த 13-ம் திகதி தலைநகர் டெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றுள்ளார்.
அப்போது காவல் துறையினர், மாஷா அமினியை வழிமறித்ததோடு, முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றஞ்சாட்டி கைது செய்து சிற்றூர்ந்தில் அழைத்துச் சென்றனர்.
காவல் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதில் கோமா நிலைக்குச் சென்ற அவர் மருத்துவமனையில் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது.
இந்நிலையில், ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபரின் இறுதி சடங்கு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிரிழந்த இளைஞனுக்காக பெண்கள் அனைவரும் அவரது நினைவிடத்தில் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவரின் சகோதரி தனது கூந்தலை வெட்டி அவரின் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
குறித்த சகோதரி தனது கூந்தலை தானே வெட்டிக்கொள்ளும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.