சங்கக்காரவின் வெற்றிகளிற்கு யார் காரணம் – அவரின் மனைவி தெரிவித்திருப்பது என்ன?

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவின் வெற்றிகளிற்கு இறைவனே காரணம் என அவரது மனைவி யெஹாலி சங்கக்கார தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக ஒட்டங்களை குவித்த துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார அதற்கான பெருமையை நான் இறைவனிற்கு வழங்குகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.குமார் 15 வருடங்கள் கிரிக்கெட்; விளையாடினார் அந்த 15 வருடங்களும் நாங்கள் பிரிந்து இருந்ததில்லை ,என தெரிவித்துள்ள சங்கக்காரவின் மனைவி ரி 20 உலக கிண்ணப்போட்டிகளின் போது குமார் சங்கக்கார சிறப்பாக விளையாடதவேளை நான் ஆண்டவனை வேண்டினேன்,நீங்கள் அவரை தொடர்நாயகனாக மாற்றுவீர்கள் என்பது எனக்கு தெரியும் என வேண்டினேன் என யெஹாலி சங்கக்கார தெரிவித்துள்ளார்.

குமார் இறுதிப்போட்டியில் அரைசதமடித்து இலங்கை அணிவெற்றிபெறச்செய்தார்,நான் முழங்காலில் அமர்ந்து அதற்கான பெருமையை ஆண்டவனிற்கு வழங்கினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின் உறுப்பினராக நான் வழங்கப்பட்டதே ஆழமான கிறிஸ்தவ நம்பிக்கைக்கான காரணம் நானும் கணவரும் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளோம் ஆனால் ஆண்டவன் வழிகாட்டும் வழிநடத்தும் திசையில் நான் பயணிக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *