ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் தற்போதும் புறக்கோட்டையில் கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபாய் முதல் 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக புறக்கோட்டை அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை குறைப்பதற்காகவும் கோதுமை மாவின் விலையை குறைப்பதற்காகவும், வர்த்தக அமைச்சு புதிய திட்டம் ஒன்றை அமுல்படுத்தியுள்ளது.
இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கடன் சான்று பத்திரமின்றி நேரடியாக பணம் செலுத்தி கோதுமையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.