சுயநிர்ணய உரிமையை பயன்படுத்தி சர்வதேச சமூகத்தின் உதவியுடன் வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.