சார்ல்ஸ் மன்னராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்-

தனது தாயின் பாதையை பின்பற்றுவேன் என மன்னர் சார்ல்ஸ் உறுதியளித்துள்ளார்

செயின்ட் ஜேம்ஸ் அரண்மணையில் இடம்பெற்ற நிகழ்வில் சார்லஸ் 111 மன்னராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தனது தாயாரின் மறைவை தொடர்ந்து சார்ல்ஸ் மன்னரானார் எனினும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் அது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.

இரண்டாவது எலிசபெத் மகாராணியின்  இறுதி நிகழ்வுகள் இடம்பெறும் தினத்தை சார்ல்ஸ் வங்கி விடுமுறையாக அறிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு முதல்தடவையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் மன்னர் பங்குகொள்ளாத போதிலும் மன்னருக்கு ஆலோசனை வழங்கும் சிரேஸ்ட அரசியல்வாதிகளின் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

மன்னர் பொதுநலவாயத்தின் தலைவர் மதநம்பிக்கையின் பாதுகாவலர் இறைவன் மன்னரை காப்பாற்றவேண்டும் என பிரிவி கவுன்சிலின் எழுத்தர் பிரகடனம் செய்தார்.

இதன் பின்னர் தனது சொந்த பிரகடனத்தை  வெளியிட்ட மன்னர் தனது தாயாரின் மரணத்தை அறிவிப்பது தனது துயரம் மிகுந்த கடமை என்றார்.

என் சகோதரி மற்றும் சகோதரர்களுக்கு பலர் வெளிப்படுத்திய அனுதாபத்தை அறிந்து கொள்வது எனக்கு மிகப்பெரிய ஆறுதல்என அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *