
வாஸ் கூஞ்ஞ) 20.09.2022
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சமுர்த்தி சமூகப்பாதுகாப்பு நிதியத்தின் மூலம் மாணவர்களுக்கான சமுர்த்தி ‘சிப்தொர’ புலமைப்பரிசில் கொடுப்பனவு மன்னார் மாவட்டத்தில் வழங்கப்படும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது
அதற்கமைய சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சமுர்த்தி சமூகப்பாதுகாப்பு நிதியத்தின் மூலம் மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மன்னார் பிரதேச செயலாளர் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (15.09.2022) அன்று மன்னார் பேசாலை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் மாவட்ட செயலாளருமான திருமதி ஸ்ரான்லி டி மெல் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கொடுப்பனவு சான்று பத்திரங்களையும் காசோலையினையும் வழங்கிவைத்தார்.
சமுர்த்தி அபிவிருத்தி வங்கி ஊடாக சமுர்த்தி உதவி பெரும் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள கல்விப் பொதுத்தராதர சாதரண தரம் சித்தியடைந்து 2021-2023 கல்வியாண்டில் உயர்தரக் கல்வியை தொடர்கின்ற மாணவர்களின் கல்வி ஊகக்குவிப்புக்காக குறித்த சமுர்த்தி ‘சிப்தொர’ புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் , பிரதேச செயலக கணக்காளர் , கோட்டக் கல்வி பணிப்பாளர் , பாடசாலைகளின் அதிபர்கள் , சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.