சிறிய மீன்களின் விலை குறைந்துள்ளது!

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த சிறிய மீன்களின் விலை இன்று (09) குறைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மீன்கள் பிடிபடும் அளவு அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என அச்சங்கத்தின் தலைவர் ஜயந்த விக்கிரமாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஒரு வாரத்திற்கு போதுமான மண்ணெண்ணெய் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டாலும், எதிர்காலத்தில் 3 முதல் 4 நாட்களுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கஹவத்த தெரிவித்தார்.

மண்ணெண்ணெய் பெறுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக மண்ணெண்ணெய் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாள் மீன்பிடி படகுகளுக்கு வழங்கப்படுவது போன்று தினமும் மண்ணெண்ணெய் வழங்கப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *