சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ரணிலுக்கு ரஞ்சன் வழங்கியுள்ள வாக்குறுதி! பகிரங்கமாக அறிவித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் தான் வாக்குறுதியளித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ்  இன்று ரஞ்சன் ராமநாயக்க விடுதலைப் பெற்று வெளியே வந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நீதியமைச்சர் விஜயதாச  ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு பரிந்துரை செய்வதற்கு முன்னர் தன்னிடம் வாக்குறுதி ஒன்றை பெற்றதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நீதியமைச்சர் விஜேதாசவுக்கும் வாக்குறுதியளித்தேன்.

இதில் கையொப்பமிட என்னைப் பரிந்துரைக்கும் முன் அவர் என்னிடம் ஒரு வாக்குறுதியைப் பெற்றார். ஊழலுக்கு எதிராக போராடுவதாக உறுதியளித்தால் மட்டுமே மன்னிப்பு வழங்கப்படும் என. எனவே மக்கள் நான் திருடர்களைப் பிடிக்க விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். அது தொடர அனுமதிக்கப்பட்டது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.