
சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைப்பது தாமதமாவதால் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பெற்றுக்கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் குறித்து சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படுவதற்கு இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடவேண்டும் என 2021லேயே யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் அவ்வேளை மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றியவர் அதனை ஏற்க மறுத்ததால் அது தாமதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.