
வீட்டு வன்முறைகள் அண்மைக்காலமாக சீனா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதி வழங்கவும் மீள் நிகழாமையை உறுதி செய்யலும் அந்நாட்டு நீதித்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சீன பெண்கள் குடும்ப வன்முறை பற்றி அதிகம் பேசுகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் இது தேசிய பிரச்சினையாக உயர்ந்துள்ளது. அண்மைய தரவு கிடைக்கப்பெறாத நிலையில், கடந்த கால புள்ளிவிவரங்கள் பிரச்சனை எவ்வளவு கடுமையானது மற்றும் ஆபத்தானவையாக மாறியுள்ளமையை வெளிப்படுத்துகின்றது.
2010 ஆம் ஆண்டில், சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் மற்றும் பெண்களின் சமூக நிலை பற்றிய மூன்றாவது கணக்கெடுப்பு 20-64 வயதுக்குட்பட்ட 24.7 வீதம் பெண்கள் பல்வேறு வடிவங்களில் குடும்ப வன்முறையை அனுபவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. பெண்களின் ஆதரவுக் குழுக்கள் ஆண்டுதோறும் சராசரியாக 40,000 முதல் 50,000 குடும்ப வன்முறை புகார்களைப் பெறுகின்றன.
பிரச்சனையை இலக்காகக் கொண்ட முதல் சட்டம் 2015 இல் நிறைவேற்றப்பட்டது. குடும்ப வன்முறை எதிர்ப்புச் சட்டத்தின் முக்கியக் கொள்கைகள் ‘குடும்ப வன்முறையைத் தடுப்பதும் நிறுத்துவதும் ஆகும்.
குடும்ப உறுப்பினர்களின் சம உரிமைகளைப் பாதுகாத்தல்; சமமான, இணக்கமான, நாகரீகமான குடும்ப உறவுகளைப் பாதுகாத்தல்; குடும்ப நல்லிணக்கத்தையும் சமூக ஸ்திரத்தன்மையையும் ஊக்குவிக்குப்பதும் இந்த சட்டத்தின் இலக்குகளாகும்.